என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி மீட்பு"
போச்சம்பள்ளி அருகே காணாமல்போன மனைவியை செல்போன் நெம்பரை வைத்து மீட்டு கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை(30). இவரும் இதே பகுதியை சேர்ந்த மாலதி (27) என்பவரும் கடந்த 4 வருடங்ளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
தனது மனைவி மாலதி காணவில்லை என்று கணவர் தங்கதுரை கடந்த 5.12.2018 அன்று பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் மாலதியிடம் உள்ள செல்போன் நெம்பரை வைத்து டிரெக் செய்ததில் அவர் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் என்ற இடத்தில் இருப்பதாக தெரியவந்தது.
மேலும் மாலதி அவரின் தோழி வீட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து, அங்குசென்று மாலதியையும், குழந்தையையும் அழைத்து வந்து பின்னர், கணவர் தங்கதுரையிடம் ஒப்படைத்தனர்.






