என் மலர்
நீங்கள் தேடியது "குண்டூர்"
ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதார் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். #PMModi #BPCL
அமராவதி:
ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குண்டூர் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்தில் அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவ் வகுத்துத் தந்த பாதையில் இருந்து சந்திரபாபு நாயுடு முற்றிலும் விலகி விட்டார் என தெரிவித்துள்ளார். #PMModi #BPCL
அந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் சொத்துக் குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். பில் கலெக்டராக இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இதன் காரணமாக மாதவுக்கு வாரிசு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2016-ல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூரில் மாதவிற்கு சம்பந்தப்பட்ட 7 இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது நிலம், பிளாட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்ரபோயினா மாதவை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector






