search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் கைது - ரூ.50 கோடி பணம் பறிமுதல்
    X

    சொத்து குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் கைது - ரூ.50 கோடி பணம் பறிமுதல்

    அந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் சொத்துக் குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector

    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். பில் கலெக்டராக இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இதன் காரணமாக மாதவுக்கு வாரிசு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2016-ல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

    இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூரில் மாதவிற்கு சம்பந்தப்பட்ட 7 இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையின் போது நிலம், பிளாட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதையடுத்து, முத்ரபோயினா மாதவை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector
    Next Story
    ×