என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மாணவிக்கு குழந்தை"

    மதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்னகட்டளையைச் சேர்ந்த 16 வயது பெண், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பெற்றோர் பெரும்பாலான நாட்களில் கூலி வேலைக்கு சென்றுவிட, அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இந்த நிலைமைக்கு யார் காரணம்? என பலமுறை கேட்டுள்ளனர். ஆனால் மாணவியால் சரியான தகவலை தெரிவிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே கடந்த 10-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மைனர் பெண் என்பதால் தற்போது அந்த மாணவி சிறுமிகள் நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×