என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை"

    தொட்டியம் அருகே தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சாமிதுரை ( வயது 80) , ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். சம்பவத்தன்று சாமிதுரை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். 

    பின்னர் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு தங்கசங்கிலி, வளையல், மோதிரம் உள்பட 21 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

    இது குறித்து சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×