என் மலர்
நீங்கள் தேடியது "அருண் ஜெட்லி கடிதம்"
புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை பாஜக தலைவர் அமித் ஷா இறுதி செய்து வருகிறார்.

இந்நிலையில், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.






