என் மலர்
நீங்கள் தேடியது "Skill Development Competition"
- புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கோலப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு திறன்மேம்பாட்டு போட்டிகள் நடந்தது.
- போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டார வளமைய கட்டிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கோலப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு திறன்மேம்பாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், ஆசிரியர்கள் சிவராமன், டேவிட்ஞானராஜ், செந்தூர்பாண்டி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் செய்திருந்தனா்.






