என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivarkathikeyan"

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் `கனா' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Kanaa
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம், மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

    நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



    இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். #Kanaa #Sivakarthikeyan
    ×