search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simono Halep"

    பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முகுருசாவை வீழ்த்திய சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஹாலெப் அதிரடியாக விளையாடினார்.

    முதல் செட்டை ஹாலெப் 6-1 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டை 6-4 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-1, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 



    மற்றொரு அறையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் கீஸ், சக நாட்டு வீராங்கனையாக ஸ்டீபென்ஸ் உடன் பலப்பரீட்சை செய்து வருகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக ஹாலெப் உடன் மோத உள்ளார். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
    பாரிசில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முகுருசா, ஹாலெப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் காலிறுதி சுற்றை எட்டியுள்ளன.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 12-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை கெர்பர் 7-6 என்று போராடி கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஹாலெப், 6-3 என கைப்பற்றி போட்டியை சமனாக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாலெப் மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-7 (7-2), 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.



    மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசா, ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஹாலெப் - முகுருசா, கீஸ் - ஸ்டீபென்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #SimonoHalep #GarbineMuguruza #FrenchOpen2018
    ×