search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops closed in Kanyakumari"

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimalatemple #SCverdict
    கன்னியாகுமரி:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவை போன்று தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கன்னியாகுமரியில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

    இப்போராட்டத்தில் கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பகவதி அம்மன் சிறுவியாபாரிகள் நல சங்கம், பார்க் வியூ பஜார் வியாபாரிகள் சங்கம்,

    விவேகானந்தா சிறுகடை வியாபாரிகள் சங்கம், தமிழன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்கள் இக்கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

    வியாபாரிகளின் போராட்டம் காரணமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, ரத வீதி, பார்க் வியு பஜார், கடற்கரை சாலை, திரிவேணி சங்கம் போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    வியாபாரிகள் போராட்டம் காரணமாக கன்னியாகுமரிக்கு இன்று சுற்றுலா வந்த பயணிகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இப்போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  #Sabarimalatemple #SCverdict
     


    ×