search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seven and half sani"

    நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.
    நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது. சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையை கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தருவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும்.

    ஏழு தலைமுறைகளுக்காக சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான். அந்த சொத்துகளை கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது. தொழில் அதிபர் என்கிற தகுதியை தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வம்சாவழியாக வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.

    மன வைராக்கியத்தை அருள்பவர், பிறரது மரணம் அடையும் கால நேரம் அறியும் சக்தி, மரணத்திற்கு பின் நடக்கும் சம்பவங்களை உணரும் சக்திகளைத் தருபவரும் சனி பகவானே. வக்கீல் தொழில், நீதிபதி பதவி, ரெயில்வே துறையில் பெரிய பதவிகள், காலணி கடை, கசாப்பு கடை, எருமை பண்ணை, மர விறகு கடை போன்றவற்றால் லாபத்தை அருள்பவர் சனீஸ்வரன். தவிர பிண அறையில் காவலாளி வேலை, பிணத்தை அறுத்து ஆய்வு செய்யும் (போஸ்மார்ட்டம்) பணி, சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பது, அவசர உதவி ஆம்புலன்ஸ் வண்டியில் வேலை போன்றவற்றுக்கு சனி பகவானின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது.
    அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார்.
    ஏழரைச் சனி என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் பருவத்திற்கேற்ப துன்பம் தரும். குறிப்பாக வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது.

    அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன்.

    எத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.

    யோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம்.
    உதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும்.

    மாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாகும்.

    சனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலானாவர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான்.

    மன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.

    ஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொரு வருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.

    எதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு. 
    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது.
    ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் கேட்டிருக்கிறீர்கள்.

    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரயம் செய்வார் என்று இதைப் பற்றிய அனுபவ ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான்.

    மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

    ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

    சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

    இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

    கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

    பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

    மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி மங்கு சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் எனவும், இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மரணச்சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தை குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது.



    இதில் சிலர் புரிந்து கொள்ளாத ஒரு முரண்பாடு என்னவெனில் குழந்தையாய் இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்த முப்பது வயதுகளில் வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச்சொல்லி முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்

    உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும்.

    பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச் சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவரின் கர்மா விழிக்காத பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. அந்தப் பருவத்தில் வரும் சனி அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே தீமைகளைச் செய்யும். அதன் மூலம் அந்தக் குழந்தையும் பாதிக்கப்படும்.

    ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

    குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற்றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி பலன் தராது.

    உண்மையில் சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

    சுருக்கமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே அது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.
    ×