என் மலர்

  நீங்கள் தேடியது "Senkottai. Agriculture College"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செங்கோட்டை வட்டாரத்தில் வல்லநாடு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • அப்போது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் முக்கிய நோக்கமான விவசாயிகளுக்கு உதவுதல், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார்.

  செங்கோட்டை:

  வல்லநாடு கிள்ளிக் குளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் 7-ம் பருவத்தின் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப் புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் படி கல்லூரி முதல்வர் டாக்டர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன், செந்தில்நாதன் வழிகாட்டுதலுடன் இணைப் பேராசிரியர் டாக்டர் ஆல்வின் மேற்பார்வையில் செங்கோட்டை வட்டாரத்தில் மாணவர்கள் முகாமிட்டுள்ளனர்.


  பயிற்சியின் தொடக்கமாக தென்காசி மாவட்ட இணை வேளாண் இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனைப்படி மாணவர்கள் செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலர் ஷேக் முஹைதீனை சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலில் செங்கோட்டை வட்டாரத்தைப் பற்றியும், அங்கு பயிரிடப்படும் பயிர்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

  அப்போது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் முக்கிய நோக்கமான விவசாயிகளுக்கு உதவுதல், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகையதீன் தலைமையில் ஒன்பது மாணவர்கள் 75 நாட்கள் செங்கோட்டை வட்டாரத்தில் தங்கி செயல்பட உள்ளனர்.

  ×