என் மலர்
நீங்கள் தேடியது "Sembane Spider"
- மரவள்ளி பயிரிட்டுள்ள வயல்களை களஆய்வு மேற்கொன்டனர்.
- முறையான நீர்மேலாண்மை, களை நிர்வாகம் செய்து வயலினை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, சித்தேரிபட்டு, வேளானந்தல், சிங்காரப்பேட்டை, சூளாங்குறிச்சி, ஆகிய வருவாய் கிராமத்தில் 1200 ஏக்கர் பரப்பளவு மரவள்ளி பயிர் நடவு தோட்டத்தில் செம்பேன் பாதிப்புக்கு உள்ளான வயலினை ரிஷிவந்தியம் வட்டார, தோட்டகலை உதவி இயக்குனர் முருகன், தோட்டகலை அலுவலர் ஷோபனா, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரிஷிவந்தியம் சுற்றுவட்டார மரவள்ளி பயிரிட்டுள்ள வயல்களை களஆய்வு மேற்கொன்டனர். இந்த ஆய்வில் நமது மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக தொடர்ந்து அனல் காற்றுடன் கூடிய அதிகப்படியான வெப்பம் நிலவுவதாலும் மரவள்ளி பயிரில் செம்பேன் பூச்சிகளின் தாக்குதல் இருப்பது தெரிய வந்தது. பலத்த மழைபெய்து வரும்போது பூச்சிகளின் தாக்குதல் தானாகவே குறைந்துவரும் இருப்பினும் முறையான நீர்மேலாண்மை, களை நிர்வாகம் செய்து வயலினை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ளு ம்பட்சத்தில் செம்பேன் பூச்சிகளின் பாதிப்பு குறையும் இல்லையென்றால் செம்பேன் பூச்சி பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இரசாயண பூச்சி மருந்துகளான 1 லிட்டர் தண்ணிருக்கு நனையும் கந்தகம் தூள் 3 கிராம் (அ) டைகோபால் 2 மில்லி வீதம் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து பூச்சிகளை கட்டுபடுத்தலாம். பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 1 லிட்டர் தண்ணிருக்கு பெனசோகன் 2 மில்லி அல்லது ப்ரோபெர்கைட் 2 மில்லி என்ற வீதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து பூச்சிகளை கட்டுபடுத்தி மகசூலை அதிகபடுத்தலாம் என இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் விவரங்கள் அறிய ரிஷிவந்தியம் வட்டாரம் அந்த அந்த பகுதி உதவி தோட்டகலை அலுவ லர்களை அணுகுமாறு கேட்டுகொண்டுள்ளனர்.






