என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scythe cut for woman"

    • குயின் தனது வீடு உள்ள வாடித்தெரு பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த உதயா என்ற உதயமூர்த்தி அரிவாளால் குயினின் தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
    • படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் குயின் (வயது 35). இவர் தனது வீடு உள்ள வாடித்தெரு பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த உதயா என்ற உதயமூர்த்தி (24) அரிவாளால் குயினின் தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தியை கைது செய்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சிப்காட் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு ரவுடி பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×