search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scold"

    பூமியான்பேட்டையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    பூமியான்பேட் பாவாணர் நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 32). இவரது உறவினர் மகள் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த மெக்கானிக் சூரியா (21) என்பவர் காதலித்து வந்தார்.

    அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா அவர்களை பிரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூரியா சங்கீதாவின் வீட்டுக்கு வந்து அவரை ஆபாச வார்த்தைகள் கூறி திட்டினார்.

    இதுபற்றி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் சூரியாவை கைது செய்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இழப்பீடு கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரை சேர்ந்தவர் வைரமணி (வயது 28). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று மதியம் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த வைரமணி விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வீட்டின் தனி அறைக்கு சென்ற வைரமணி அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த நிறுவன மேலாளர், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் திட்டியதால் மன உளைச்சலில் வைரமணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே வைரமணி தற்கொலை செய்ய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வைரமணி தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

    சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ×