என் மலர்

  நீங்கள் தேடியது "school van driver"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள ஆலாப்புரம் பகுதியை சேர்ந்த  உறவினர் வீட்டில் ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது 17 வயது மகள், மகன் ஆகியோருடன் தங்கி உள்ளார். இவரது 17 வயது மகள் தொட்டப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

  அப்போது மாணவிக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக  வேலை பார்க்கும் மாதேஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனியாக பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

  ராமசாமி மற்றும் அவரது மனைவி இருவரும் பெங்களூருரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். விடுமுறை காலங்களில் மட்டும் தனது மகளை ராமசாமி வந்து பார்த்து செல்வது வழக்கம். கடந்த 1-ந்தேதி அன்று மாணவியின் பாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரை தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

  இது குறித்து மாணவி தனது தந்தைக்கு போன் செய்தார். உடனே ராமசாமி குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து தருமபுரி தனியார் மருத்துவ மனைக்கு வந்து பார்த்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவி தனது காதலன் மாதேஸ்சுக்கு போன் செய்து மருத்துவ மனை அருகே வரவழைத்தார். அவர் வந்து மாணவியை மாதேஸ் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். 
  அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மாதேஸ் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

  மாதேஸ்சிடம் மாணவி நான் எங்க வீட்டிற்கு போக வேண்டும் என்று கதறினார். இதனால் மாதேஸ் மாணவியை ஆலாப்புரம் வீட்டின் அருகே கடந்த 5-ந்தேதி அன்று விட்டு தப்பி சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். 

  இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தம்மாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  ×