search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school building collapse"

    • கடந்த 20 ஆண்டுக்கு முன் ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
    • குளிப்பட்டி பள்ளிக்கூடம் கொரோனாவுக்கு பின் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு,ஈசல்திட்டு,குருமலை,குளிப்பட்டி உள்ளிட்ட 15 மேற்பட்ட வனக்குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள குளிப்பாட்டி வனக் குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுக்கு முன் ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. வருடங்கள் பல ஆனதால் பள்ளிக்கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையின்‌ உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழுந்து,கட்டிடம் முழுமையாக இடியும் நிலையில் இருந்தது.

    மேலும் சில இடங்களில் மேற்கூரை வலுவிழந்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டும் காணப்பட்டதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆசிரியர்களும் பெற்றோரும் அருகில் உள்ள மலைவாழ் மக்கள் வீடு ஒன்றின் முன்பாக செட் அமைத்து அங்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இரு ஆசிரியர்கள் இங்கு பணிபுரிந்து வரும் நிலையில்,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து தங்கள் குழந்தைகளின் கல்வியை காக்க முன் வர வேண்டும் என குளிப்பட்டி மலைவாழ் மக்கள் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளிப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.அப்போது ஏற்கனவே வலுவிழந்து காணப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.அப்போது அங்கு பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

    இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், குளிப்பட்டி பள்ளிக்கூடம் கொரோனாவுக்கு பின் திறக்கப்பட்டது முதல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் குளிப்பட்டி கிராமம் இராவணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாகும். வலுவிழந்து உள்ள பள்ளிக் கட்டிடத்துக்கு பதில் புதிய கட்டிடம் வேண்டி பல முறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்திபோது மழையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.மொத்த கட்டிடமும் வழுவிழந்து காணப்படுவதால் இதனை முழுமையாக அகற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்து மலைவாழ் குழந்தைகளின் கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தகர்ப்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ளது. மொத்தம் 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் பழமையானதாகும். சுவர் முழுவதும் விரிசலுடன் காணப்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் மேற்கூரை கான்கிரட் பகுதி திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள கோவிலில் வைத்து பாடம் நடத்தினர்.

    பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

    அப்போது அந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டர் அன்புச்செல்வன் ஏற்பாடுகள் செய்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வடகரை ஊராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளி கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.

    அதே இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் விரைவில் கட்டப்படுகிறது. அந்த பணிகள் தொடங்கி முடியும் வரை மாணவ- மாணவிகள் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×