search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayalgudi"

    சாயல்குடி- அருப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கிறது.

    சாயல்குடி:

    சாயல்குடி- அருப்புக் கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங் களில் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டது.

    இந்த சாலை பழுதாகி கரடு முரடாகவும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. மேலும் டி.வேப்பங்குளம் அருகேயுள்ள சாலையில் நடுப்பகுதி ஒருபக்கம் தாழ்வாகவும் மற்றொரு புறம் மேடாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதியைப் பின்பற்றாமல் சமமான சாலையில் செல் வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இதனால் அடிக்கடி வாகனங்கள் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற் படுகிறது. சமீபத்தில் மரா மத்து செய்யப்பட்ட இந்த தார்ச்சாலை முறை யாக போடாததால் பல இடங்களில் குண்டும் குழி யுமாகவும், மேடு-பள்ள மும் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இச்சாலையை மராமத்து செய்தவர்களின் முறைகேட்டால் தற்போது முன்பு நன்றாக இருந்த சாலையும் நடு நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், கொக்காடியிலிருந்து டி.வேப்பங்குளம் வரை வளைவான பகுதி என்ப தாலும் வாகன விபத்து அடிக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழுதான சாலைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கைகள் விடுத்தும் சாலையை மராமத்து செய்யாமல் நெடுஞ் சாலைத்துறையினர் மெத்தனம் காட்டுவதால் தான் விபத்துகள் தொடர் கிறது என்று கூறினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை மராமத்து செய்து சமமாக்கி விபத்து அபாயத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாயல்குடி:

    குருவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குருவாடி, கொக்காடி, அவத்தாண்டை, எஸ்.எம்.இலந்தைகுளம் கிராமங்களிலிருந்து மாணவ படித்து வருகின்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 300 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

    இப்பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால் வெளியே மரத்தின் நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இடவசதி இல்லாத காரணத்தால் பொது மக்கள் கோரிக்கையின் பேரில் ஆறு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக குருவாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் நபார்டு வங்கியின் மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படாமல் பழைய கட்டிடத்திலேயே இந்த பள்ளி இயங்கி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு மாணவ -மாணவிகளை அனுப்புகிறோம்.

    கடந்த ஆண்டுகளில் பள்ளியின் ஓடுகள் கீழே விழுந்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். பழைய கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இடநெருக்கடி காரணமாக 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகிவிட்டது.

    புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்றாமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
    ×