என் மலர்
நீங்கள் தேடியது "Sandip Ghosh"
- முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் மீது ஜூன் மாதம் புகார்.
- பொலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சந்தீப் கோஷ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிபிஐ இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. சுமார் 53 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021-ல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்.
பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பெற்றோர்களிடம் தாமதமாக தெரிவித்தது. கொலை நடைபெற்ற இடத்தில் புதுப்பித்தல் வேலை தொடர்பாக அவர் எடுத்த முடிவு ஆகியவை குறித்து சிபிஐ கேள்விகள் கேட்டது.
சந்தீப் கோஷை சுற்றி சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது.
- கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
- ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் உள்பட 2 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.
நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திகையை தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.






