search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samathupurams"

    • ரூ.1.15 கோடியில் சமத்துவபுரங்களை சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, சிறுகூடல்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப்பணிகள், சாலைப்பணிகள், நூலகப் பராமரிப்பு, பள்ளி பராமரிப்பு, பொது விநியோகக் கட்டிடம் பராமரிப்பு, நுழைவுவாயில் பராமரிப்பு, பொரியார் சிலை பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி, பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளில் பழுது பார்த்தல், குடிநீர் விநியோகம் செய்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், பூங்கா பராமரிப்பு, தந்தை பெரியார் சிலை பராமரிப்பு, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி, நுழைவுவாயில், பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பள்ளி கழிப்பிட வசதி போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசனூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டிலும், அமராவதிபுதூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.01 கோடி மதிப்பீட்டிலும், புளிச்சிகுளத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், பையூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.42 கோடி மதிப்பீட்டிலும், சிறுகூடல்பட்டியில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும், விஜயபுரத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.32 கோடி மதிப்பீட்டிலும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சமத்துவபுரத்தில் உள்ள பூங்காக்களை பராமாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இல்லந்தோறும் உள்ள கழிப்பறைகளை சீர்செய்து தொடர்ந்து பயன்படுத்திடவும், தெருவிளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்தினை சீரான முறையில் மேற்கொள்ளவும், நூலகங்களை பராமாரித்து அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாகதிருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள், துறை அலுவலர்கள் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு, உதவிப்பொறியாளர்கள் அன்புச்செல்வன், சுப்பிரமணி, வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×