search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of cotton"

    • பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது.
    • மொத்தம் ரூ.34 லட்சத்து ஆயிரத்து 175-க்கு பருத்தி விற்பனையானது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு புரட்டாசி பட்ட பருத்தி ஏலத்திற்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,482 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் பருத்தி ஏலம் நடை பெற்றது.

    இதில் பிடி ரக பருத்தி குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரத்து 321-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 89-க்கும் விற்பனையானது.

    இதனை பெருந்துறை, சத்தியமங்கலம் புளியம் பட்டி அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்றுவட்டார பகுதி களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    மொத்தம் ரூ.34 லட்சத்து ஆயிரத்து 175-க்கு பருத்தி விற்பனையானது.

    • 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.ஒரு கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 415 விவசாயிகள் தங்களுடைய 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,300 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,700 முதல் ரூ. 8,656 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.ஒரு கோடி ஆகும்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா். 

    ×