search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saghupuram"

    • புன்னக்காயலில் மீனவர்களின் வலைகளை பாதுகாப்பதற்கான கூடம் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் நீர் நிலைகளில் தூர்வாரும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டன.

    இதன்படி புன்னக்காயலில் மீனவர்களின் வலைகளை பாதுகாப்பதற்கான கூடம் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காயல்பட்டினம் சிங்கித்துறையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான அரங்கம் திறக்கப்பட்டது. ஆறுமுகநேரியை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் நீர் நிலைகளில் தூர்வாரும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அரிமா ஆளுநர் விஸ்வநாதன், அவரது துணைவியார் கலையரசி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சாகுபுரம் அரிமா சங்கத் தலைவர் தாமஸ் மாசிலாமணி வரவேற்று பேசினார். செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார்.

    நிகழ்ச்சியில் 4 தையல் எந்திரங்கள், 7 சைக்கிள்கள் மேலும் பலருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    டி.சி.டபிள்யூ நிறுவன துணை உதவி தலைவர் மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு துறை அதிகாரி பிரகாஷ், ஒயிட்பீல்ட் ஆர்தர், அரிமா சங்க பொருளாளர் பொன் சரவணன், முத்துப்பாண்டியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    ×