என் மலர்

  நீங்கள் தேடியது "Sada"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டார்ச்லைட்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். #Sada #TorchLight
  நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து ‘டார்ச்லைட்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் சதா நடித்துள்ளார். 

  இப்படம் குறித்து இயக்குனர் மஜீத் கூறும்போது, “வறுமையைப் பயன்படுத்திப் பெண்களை இந்தச் சமூகம் எப்படிப்பட்டப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

  இந்தக் கதை சார்ந்து பலர் உண்மை சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து பேசி, வீடியோவில் பதிவுசெய்து படமாக்கினேன். இந்தப் படத்துக்கு சென்னையில் உள்ள சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.  எனவே, மும்பைக்குச் சென்று போராடி, ‘ஏ’ சான்றிதழ் வாங்கியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்” என்றார். இப்படத்தில் சதாவுடன் ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
  ×