search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rs 1.56 crore money robbery"

    சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1½ கோடியை கொள்ளையடித்தது யார்? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு லாக் தெரு பகுதியில் ரோந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தன்னிடம் இருந்த பைகளை சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார்.

    அந்த பைகளை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று எண்ணிப் பார்த்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 இருப்பது தெரிய வந்தது.

    இந்த பணத்தை வீசியவர் யார்? என்பது தெரியவில்லை. இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    பின்னர் பணத்தை அரசு கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே நந்தனத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்பிரமணியன் (67) என்பவர் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ கோடிக்குமேல் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறி இருந்தார்.

    பாலசுப்பிரமணியம் வீட்டில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றபோது, போலீசாரை பார்த்ததும், சாலையில் வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்குரிய ஆவணங்களை கொண்டு வருமாறு பாலசுப்பிரமணியனிடம் போலீசார் கூறினர். அவர் ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச் சென்றார்.

    கொள்ளை நடந்தபோது வீட்டில் அவரது மகள் இருந்துள்ளார். வீட்டில் ஆள் இருந்தபோதே கொள்ளை நடந்தது எப்படி? என்பது தொடர்பாகவும் போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக கொள்ளை சம்பவங்கள் நடக்கும்போது, கொள்ளையர்களை கண்டுபிடிப்பதிலும் பணத்தை மீட்பதிலும் போலீசார் படாதபாடு படுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கையில் இருக்கும் நிலையில் கொள்ளையன் யார்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    கொள்ளையனை கண்டுபிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
    சென்னையில் சந்தேக நபர் சாலையில் வீசிய ரூ.1.56 கோடி பணம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் மீது சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த பையை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

    போலீசார் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பணப்பையை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் இருந்தது.

    விசாரணையில் அந்தப் பணம் நந்தனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதும், போலீசாரைப் பார்த்ததும் பணத்தை சாலையில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பாலசுப்பிரமணியன் தொழில் விஷயமாக நேற்று கொல்கத்தா சென்றுள்ள நிலையில் அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×