என் மலர்
நீங்கள் தேடியது "Robbery at cell phone shop"
- அபிமேனன் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- நள்ளிரவு கடையின் முன் பக்க ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் அபிமேனன் (வயது 32). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கடையின் முன் பக்க ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் கடைக்குள் உள்ள எல்.இ.டி. டி.வி., 2 செல்போன்கள், ரூ.7,200 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் கடையை திறக்க வந்த அபிமேனன் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






