search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road rules violation"

    • மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார்.
    • சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் கோடையை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு நீர், மோர் மற்றும் வெட்டி வேரினால் ஆன தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணார் பேட்டையில் இன்று நடைபெற்றது.

    இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல் துறையினருக்கு நீர்மோர் வழங்கினார். வெட்டிவேரிலான தொப்பிகளையும் அவர்க ளுக்கு வழங்கிய பின் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடையை சமாளிக்க தொப்பியும், நீர் மோரும் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். மாநகரத்தில் சி.சி.டி.வி. காமிராக்கள் உதவியோடு இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபடு பவர்களை கைது செய்து வருகிறோம். நேற்று இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 22 வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து அந்த இருசக்கர வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    23 ஆயிரம் வழக்குகள்

    சாலை விதிகளை பின்பற்றாத 1,600 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுமார் ரூ. 2 கோடியே 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 லட்சம் ரூபாய் நேரடியாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் நீதிமன்றம் மூலம் பெறு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ் நிலையம்

    மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 6 மணி முதலே போக்குவரத்து காவலர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே கொண்டு செல்வதன் மூலம் மாநகர மையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர்கள் சரவணன், சதீஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, பேச்சிமுத்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×