என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "River floods"

    • மோர்தானா அணை நிரம்பியது
    • கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை யாகும் கடந்த 2000ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. சுமார் 11.50 மீட்டர் உயரமும் 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மோர்தானா அணை நிரம்பி வழிந்தது. அதன்பின் பலத்த மழையால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வழிந்தோடியது தொடர்ந்து பல மாதங்களாக மோர்தானா அணை நிரம்பி இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் கடுமையான கோடை காலமானதால் நிரம்பியிருந்த மோர்தானா அணையில் 5 சென்டிமீட்டர் அளவு குறைந்து 11.45 மீட்டர் உயரம் இருந்தது பலத்த காற்று அடிக்கும்போது மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் சிறிதளவு வழிந்தது.

    இந்நிலையில் கடந்த மே மாதம் தொடர்ந்து சில நாட்கள் அணைப்பகுதியில் மழை பெய்ததால் மோர்தனனை மீண்டும் 11.50 மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. 460 கன அடி தண்ணீரை அணைக்கு வந்து கொண்டிருந்தது அந்த தண்ணீர் அப்படியே அணையில் வழிந்து வெளியேறி வருகிறது.

    அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருப்பதால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மோர்தானா அணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நேற்று இரவே குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது மேலும் மோர்தானா அணையின் தண்ணீர் நள்ளிரவு ஆற்றில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வந்து குடியாத்தம் நகரை கடந்து சென்றது.

    இன்று அதிகாலையில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ஆற்றில் செல்லும் தண்ணீர் தரைப்பாலத்தில் கண்மாய் வழியாக வெளியேற அடைப்புகளை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செங்கம்:

    கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி கே.பி.ஆர். அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 105.2 அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது தென்பெண்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சாத்தனூர் அணை விரைவாக அதன் முழு கொள்ளளவான 119 அடியை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடி வரும்வெள்ளம் நீப்பந்துறை கோவிலுக்குள் புகுந்துள்ளது.

    ×