என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்பெண்னை ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்
- சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது
- விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கம்:
கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி கே.பி.ஆர். அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 105.2 அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தென்பெண்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சாத்தனூர் அணை விரைவாக அதன் முழு கொள்ளளவான 119 அடியை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடி வரும்வெள்ளம் நீப்பந்துறை கோவிலுக்குள் புகுந்துள்ளது.
Next Story






