search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "REVIES MEETING"

    • துறையூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்
    • ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    துறையூர்:

    தமிழக காவல்துறையில் சம்பந்தப்பட்ட காவல் துறை சரகத் துணைத் தலைவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வட்ட காவல் நிலையத்தை ஆய்வு செய்வது வழக்கம். இதனை ஒட்டி திருச்சி சரக துணை தலைவர் சரவண சுந்தர் துறையூர் வட்ட காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதியறை, கணினி அறை, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் ஆய்வின்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், துறையூர் வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரகாந்த், முத்துசாமி உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.

    • வேளாண்துறை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கரூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பேசியபோது, சம்மந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலக்கை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைவர். அந்த வகையில் அலுவலர்களின் பணி இருக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. வேளாண் பொறியியல் துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டப் பணிகள்

    மற்றும் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் ஆகியவைகள் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ×