search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renshaw"

    • வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரரும், முன்னணி பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பவுன்சர் பந்து வார்னர் ஹெல்மெட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. ஹெல்மெட்டில் பந்து பட்டதால் அவர் நிலை குலைந்தார். உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் அவரை பரிசோதித்தார்.

    ஆனால் அவர் மூளை அதிர்ச்சி சோதனைக்கு உட்படுத்தவில்லை. மேலும் ஹெல்மெட்டில் அடிபட்ட பிறகு அதை மாற்றவில்லை. தொடர்ந்து விளையாடி அவர் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்த போது அவர் பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை.

     

    இந்த நிலையில் வார்னர் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவர் இன்றும் பீல்டிங் செய்ய வரவில்லை. 2-வது இன்னிங்சில் அவர் விளையாட மாட்டார். வார்னர் விலகியதால் அந்த அணிக்கு பாதிப்பாகும்.

    இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா? என்பது உறுதியாகவில்லை. முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.

    வார்னர் விலகியதால் அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் மேட்ரென்ஷா சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் 2-வது இன்னிங்சில் வார்னர் இடத்தில் பேட்டிங் செய்கிறார்.தொடக்க வீரராக ஆடுவார்.

    அதே நேரத்தில் ரென்ஷா பந்து வீசுவதற்கு அனுமதி இல்லை என்பதை ஐ.சி.சி. மேட்ச் நடுவர் ஆண்டி பைகிராப்ட் உறுதி செய்தார்.

    ×