search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehearse parade"

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சாலைகளில் போலீசார் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று நெல்லை டவுன் ஆர்ச் முன்பிருந்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கவச உடையணிந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    ஆர்ச் முன்பு தொடங்கிய அணிவகுப்பு பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு வழியாக 4 ரத வீதிகள் சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு முடி வடைந்தது.

    ×