என் மலர்
நீங்கள் தேடியது "Red Notice"
- அரசு அலுவலகத்தை பயன்படுத்தி ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு.
- இது தொடர்பான வழக்கு தலைநகர் அக்ராவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அக்ரா:
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு தலைநகர் அக்ராவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளிநாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேடப்படும் நபராக கானா அரசாங்கம் அவரை அறிவித்தது. பின்னர் அவரை கைதுசெய்ய சர்வதேச போலீசின் உதவியை அரசாங்கம் நாடியது.
இந்நிலையில், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சர்வதேச போலீசின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது எந்த நாட்டுக்கும் தப்பிச் செல்லாமல் இருக்க உலகம் முழுவதும் உள்ள போலீசுக்கு அறிவுறுத்தப்படுவதை குறிக்கிறது.
- மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது.
- மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.
புதுடெல்லி:
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்றார். தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது. இது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மெகுல் சோக்சி விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா குற்றம்சாட்டி உள்ளார். தப்பியோடிய மெகுல் சோக்சிக்கு சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவரை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாக ராகவ் சத்தா கூறியிருக்கிறார்.
மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. அதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை வழங்கத் தவறியதால், அவரது பெயர் ரெட் கார்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ராகவ் சத்தா தெரிவித்தார்.






