என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Real Estate Owner Murdered"

    அடையாறில் இன்று காலை ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    அடையாறு மல்லிகைப்பூ நகர் தாமோதரபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது33). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவரது மகனும், மகளும் அடையாறு இந்திரா நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களை தினமும் சுரேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.

    இன்று காலை அவர் வழக்கம்போல் மகனையும், மகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்தார்.

    பள்ளியில் இருந்து சிறிது தூரம் வந்தபோது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் திடீரென சுரேசின் மோட்டார்சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய சுரேஷ் மோட்டார்சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    உடனே மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அவர் இறந்ததை உறுதி செய்த கொலை கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் அடையார் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தின் அருகே ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் ரவுடி கும்பல் சுரேசை தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொலை கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையுண்ட சுரேசுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் பலருடன் மோதல் உள்ளது. இது தொடர்பாக அவர் மீதும் வழக்குகள் உள்ளது.

    2 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் சுரேசை தீர்த்து கட்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    இதை அறிந்த சுரேஷ் மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதை நோட்டமிட்ட கொலை கும்பல் தங்கள் திட்டத்தை நிறைவேற்றி விட்டனர்.

    கொலையுண்ட சுரேசுக்கு கலைவாணி என்ற மனைவியும், கார்த்திகேயன், சாய் பிரதா என்ற மகன்-மகளும் உள்ளனர்.


    பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று புதைத்த அவருடைய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அடையாறு:

    சென்னை திருவான்மியூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (வயது 53). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ஹேமா.

    கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கலியமூர்த்தி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி ஹேமா, திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் கலியமூர்த்தியின் நண்பர்களான வேளச்சேரியைச் சேர்ந்த முருகவேல் (39), காஞ்சீபுரத்தை சேர்ந்த செந்தில்(30), மாடம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(38) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், கலியமூர்த்தியை கொன்று புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கலியமூர்த்திக்கும், அவருடைய நண்பர்கள் முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கலியமூர்த்தியை கொலை செய்ய நண்பர்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக கடந்த 17-ந்தேதி, கலியமூர்த்தியிடம் காஞ்சீபுரத்தில் ஒரு நல்ல இடம் விற்பனைக்கு உள்ளது. அந்த இடத்தை பார்த்து விட்டு வரலாம் என்று நைசாக பேசி அவரை காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த ஓதியூர் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் கலியமூர்த்தியை அடித்து கொலை செய்த அவர்கள், பின்னர் அவரது உடலை அதே இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் கைதான 3 பேரையும் ஓதியூர் அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவர்கள், கலியமூர்த்தியை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காண்பித்தனர். இதையடுத்து, உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×