search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raja Ranguski"

    மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தரணி தரண் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி இருக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் விமர்சனம். #RajaRanguski
    போலீஸ் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சிரிஷ். இவர் வில்லா வளாகத்தில் தினமும் ரோந்து சென்று வருகிறார். அப்போது அந்த வில்லாவில் நாயகி சாந்தினியை பார்க்கிறார் சிரிஷ். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எழுத்து துறையில் ஆர்வமாக இருக்கும் சாந்தினி, ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்றால் செய்யும் எண்ணம் கொண்டவர்.

    இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் சிரிஷ். அவரே வேறொரு போனில், யாரோ ஒருவர் போல் பேசி, நீ சிரிஷுடன் பழக்கக்கூடாது என்று பேச, அவரோ நான் பழகுவேன் என்று கூற, இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், சிரிஷுக்கு அவரது குரலிலேயே ஒரு போன் வருகிறது. அதிர்ச்சியடையும் சிரிஷ், அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கு போது, ஒரு மர்மான முறையில் கொலை நடக்கிறது. இந்த கொலைப்பழி சிரிஷ் மேல் விழுகிறது.



    இதிலிருந்து சிரிஷ் தப்பிதாரா? அந்த மர்ம குரல் யார்? கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மெட்ரோ படம் மூலம் புகழ் பெற்ற சிரிஷ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்பாவி போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு செட்டாகி இருக்கிறது என்று சொல்லலாம். நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால், சிறப்பான இடத்தை பிடிக்கலாம்.

    நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். காதல் காட்சிகளிலும் பிற்பாதியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிரிஷின் நண்பராக வரும் கல்லூரி வினோத், ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.



    ஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தரணி தரண். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, அதை திறம்பட கொடுத்திருக்கிறார். படத்தின் திருப்பங்கள் ரசிக்கும் படி உள்ளது.

    யுவனின் இசை படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சிம்பு பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணியிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ ராஜா.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, அவரது தந்தையும், பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா வழியை பின்பற்றியிருக்கிறார். #RajaRanguski #YuvanShankarRaja
    இளையராஜாவிடம் ஒரு குணம் உண்டு. சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கூட சம்பளம் பெரிதாக எதிர்பார்க்காமல் குறைவான தொகையை வாங்கிக்கொண்டு இசை அமைத்து கொடுப்பார். தந்தை வழியில் யுவன் சங்கர் ராஜாவும் இந்த வழக்கத்தை கடைபிடிக்கிறார். 

    விரைவில் வெளியாக இருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்துக்கு யுவன் தான் இசை. பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடித்திருக்கும் இந்த படம் சின்ன பட்ஜெட்டில் உருவானது. படம் ஒரு கிரைம் திரில்லர் என்பதால் யுவன் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அணுகி இருக்கிறார்கள். தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை குறைத்து, குறைந்த சம்பளத்தில் இசை அமைத்து கொடுத்து இருக்கிறார். 



    ’வெங்கட்பிரபு, செல்வராகவன் போன்ற பெரிய இயக்குனர்களுக்கு தருகிற அதே முக்கியத்துவத்தையும், மரியாதையையும் எனக்கும் கொடுத்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் யுவன்’ என்று கூறி இருக்கிறார் இயக்குனர் தரணிதரன். ராஜா ரங்குஸ்கி படம் 25 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. #RajaRanguski #YuvanShankarRaja

    ×