என் மலர்
நீங்கள் தேடியது "rainwater from the road"
- போலீசார் சாக்கடை கால்வாயில் இறங்கி, அடைப்புகளை அகற்றி நீர் செல்வதற்கு வழிவகை செய்தனர்.
- போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.
பீளமேடு,
கோவையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து ரோட்டில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சாக்கடை கால்வாயில் இறங்கி, அதில் இருந்த அடைப்புகளை அகற்றி நீர் செல்வதற்கு வழிவகை செய்தனர். இதனால் தேங்கிய மழைநீர் வழிந்தோடியது.
போலீசாரின் இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.






