search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain in Kodaikanal"

    • கொடைக்கானலில் 7 செ.மீ மழை மண் சரிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 7 செ.மீ மழையினால் மண் சரிவினால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    விட்டு விட்டு சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. லாஸ்காட் ரோடு, உகார்த்தேநகர், செண்பகனூர் உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க–ப்பட்டு மண் சரிவு சீரமைக்கப்பட்டது.தொடர் மழை காரணமாக வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழா உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன மழை காரணமாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது

    மேலும் பழனியில் உள்ள அணைகளுக்கும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் மட்டுமே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கொடைக்கானலில் 16, போர்ட் கிளப் 54 மி.மீ மழை அளவு பதிவானது. சராசரியாக கொடைக்கானலில் மட்டும் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


    கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வலம் வந்தனர்.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. எங்கும் பசுமையாக கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கேரட், பீன்ஸ், சவ்சவ், காளிபிளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆப் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் ஆனந்தமாக வலம் வர தொடங்கியுள்ளனர்.

    ×