என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public fear of elephant"

    • ரெயில் பயணிகள் இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து அங்கு படம் பிடிப்பாா்கள்.
    • குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி,

    குன்னூா்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் ஹில்குரோவ் ெரயில் நிலையம் உள்ளது. இந்த ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ரெயில் நிறுத்தப்பட்டு என்ஜினுக்கு தண்ணீா் பிடிப்பது வழக்கம்.

    இந்த இடைவெளியில் ெரயில் பயணிகள் இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து அங்கு படம் பிடிப்பாா்கள். இந்த நிலையில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று, இந்த ெரயில் நிலையம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றி வருகிறது.

    ஹில்குரோவ் ெரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கும், மாலையில் 4.30 மணிக்கும் மலை ெரயில் வந்து செல்கிறது. இந்நிலையில், யானை நடமாட்டம் குறித்து ஹில்குரோவ் ெரயில் நிலைய ஊழியா்கள் குன்னூா் ெரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

    தற்போது வனப் பகுதியில் வறட்சி நிலவி வருவதாலும், ெரயில் நிலையம் அருகே உள்ள பலாப்பழ மரங்களில் பழங்கள் காய்ந்துள்ளதாலும் யானை அங்கு முகாமிட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

    யானை நடமாட்டத்தால் குரும்பாடி, பா்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    ×