search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Propaganda Program"

    • தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.

    நெல்லை:

    தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்தி கேயன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப் படுகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி தமிழ் மொழி வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் தங்களை கட்டமைத்து கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் இது 2-வது நிகழ்ச்சி. இங்கு மிக சிறந்த பேச்சாளர்கள் உள்ளார்கள். அவர்களது பேச்சை உள்வாங்கி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் வேலூர் புரட்சி 1806 குறித்தும், ஆறுமுக தமிழன் தமிழ் பண்பாடும், தொன்மையும் என்பது குறித்தும் பேசினார். கல்லூரி முதல்வர் உஷா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியையொட்டி அங்கு கருத்தரங்கம், கைவினை கண்காட்சி அமைக்கப் பட்டிருந்தது. மாவட்ட நூலகம் சார்பில் புத்தக கண்காட்சியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியும், வங்கிகளில் கடனுதவி பெறுவது எப்படி என்பது குறித்தும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த கைவினை பொருட்கள் இடம் பெற்றிருந்தது.

    அதனை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து வ.உ.சி. மைதா னத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    ×