என் மலர்
நீங்கள் தேடியது "private factory fire"
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் “கூலிங் அட்டை” தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்து. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர்.
தீ விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், காஞ்சிபுரம், ஆகிய பகுதியில் இருந்து 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொழிற்சாலையில் தீப்பிடித்ததும் ஊழியர்கள் வெளியே வந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.






