என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pradhan mantri ujjwala yojana"

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்ற பெண்ணிடம் தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். #PMModi #PradhanMantriUjjwalaYojana

    புதுடெல்லி:

    இலவச சமையல் எரிவாயு பயனாளிகள் திட்டம் (உஜ்வாலா யோஜனா) கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரேத்யக ஆப் (செயலி) மூலமும், தூர்தர்சன் மூலமும் இன்று காலை 9.30 மணிக்கு நேரடியாக கலந் துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தி உள்ளது.

    2014-ம் ஆண்டு வரை 13 கோடி மக்கள்தான் எரிவாயுவை இணைத்து இருந்தனர். அதில் பெரும்பாலானோர் பணக்காரர்கள்.


    கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்ற பெண்ணுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

    அப்போது அவரிடம் இலவச எரிவாயு இணைப்பு கிடைத்தது பற்றி கேட்டு அறிந்தார். பின்னர் சிரித்த வாரே தமிழகம் வந்தால் எனக்கு தோசை தயாரித்து தருவீர்களா? என்று மோடி கேட்டார்.

    அதற்கு அந்த பெண் கட்டாயம் தோசை தயாரித்து தருகிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அன்புடன் அழைப்பு விடுத்தார். #PMModi #pradhanmantriujjwalayojana

    60 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் 13 கோடி கேஸ் சிலிண்டர் இணைப்புகளே வழங்கப்பட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 10 கோடி கேஸ் இணைப்புகளை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #modi #pradhanmantriujjwalayojana
    புதுடெல்லி:

    பிரதமரின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக இன்று உரையாடினார். அப்போது பேசிய அவர், கேஸ் இணைப்பு வழங்குவது மிகவும் செலவுடையதாக இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 கோடி இணைப்புகள் இலவச இணைப்புகள் என்றும் தெரிவித்தார். இது தலித்துகள், ஏழை பெண்களின் வாழ்வில் மிகவும் உதவியாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் வழங்குவதற்கான இலக்கை 5 கோடியாக நிர்ணயித்திருந்ததாகவும், இந்த ஆண்டு அந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டில் 80 சதவிகித மக்கள் கேஸ் சிலிண்டரை உபயோகிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள இலவச இணைப்புகளில் 45 சதவிகித இணைப்புகள் தலித்துகளுக்கானது என மோடி கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு இணைப்புக்கும் எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் மானியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.



    பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமும் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி, கேஸ் உபயோகிப்பதன் அனுபவம் குறித்தும், சரியான நேரத்தில் கேஸ் வழங்கப்படுகிறதா? இடைத்தரகர்களின் தொந்தரவு இருக்கிறதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். #modi #pradhanmantriujjwalayojana
    ×