என் மலர்
நீங்கள் தேடியது "Ponmudi speech"
- வெங்கடாபுரத்தில் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது.
சூலூர்,
சூலூர் அருகே வெங்கடாபுரத்தில் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் முத்துசாமி, பொன்முடி ஆகியோர் பங்கேற்று பேசினர். சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்பரசு அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தி.மு.க அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக குடும்பச் சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டமாக்கினார் கலைஞர். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டம் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒண்றிைணந்து இந்தியா என்ற கூட்டணி உருவாவதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வனே செய்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் ரகு, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மன்னவன், கலங்கள் சிவகுமார், அரசூர் கார்கி, கண்ணம்பாளையம் நடராஜ் பத்மநாபன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வெங்கடாபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.






