search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polic investigation"

    • கேரளாவில் மகள்-மகனை ஆற்றில் வீசி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உல்லாஸ் ஹரிஹரன்உடலும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாலாரி வட்டத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் ஹரிஹரன்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கிருஷ்ணப்ரியா என்ற மகளும் ஏகநாத் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணப்ரியா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். ஏகநாத் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை உல்லாஸ் ஹரிஹரன் தனது மகள், மகனுடன் ஆலுவா பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு வந்தார். அங்குள்ள ஆற்றின் தரைப்பாலத்தில் நடந்து சென்ற அவர் திடீரென தனது மகள், மகனை தூக்கி ஆற்றுக்குள் வீசி உள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக உல்லாஸ் ஹரிஹரனும் ஆற்றில் குதித்தார். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் தத்தளித்த குழந்தைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களைஉடனடியாக ஆலுவா தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணப்ரியா மற்றும் ஏகநாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உல்லாஸ் ஹரிஹரன்உடலும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், 13 வயது சிறுவனை முதலில் ஆற்றில் வீசியதாகவும் அதன் பிறகு 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலத்தில் ஏற்றிய தந்தை அவரையும் ஆற்றில் வீசியதாக தெரிவித்தனர். 

    மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சொகுசு காரில் குட்கா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சொகுசு காரை இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    காரில் 4 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காரில் இருந்த மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ராமசாமி, பூந்தமல்லியைச் சேர்ந்த சதிஷ், திருவேற்காட்டைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத் ஆகிய 3பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 35ஆயிரம் ரொக்கம் மற்றும் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான ராமசாமி பெங்களூரில் இருந்து காரில் குட்கா பொருட்கள் வாங்கி வந்து அதை சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்து வருவது தெரியவந்தது. மேலும் மதுரவாயல் காவல் நிலையத்தில் ராமசாமி மீது கடந்த 2017-ம் ஆண்டு குட்கா கடத்திய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×