search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POISONOUS INSECTS"

    • 3 பேரும் ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.
    • பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    நன்னிலம் அருகே உள்ள தென்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அலமேலு மங்கை (வயது54), தனலட்சுமி(65), சிவா(32). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த போது, பனை மரத்தில் கூடுக்கட்டி இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    • ஸ்ரீரங்கம் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையம் விஷ ஜந்துகளில் கூடராமாக திகழ்கிறது,
    • உள்ளே செல்லவே அச்சப்படும் மக்கள்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கம் மண்டல ஆதார் மையம் அங்குள்ள நூற்றாண்டு பழமையான பாழடைந்த கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. இதில் ஆதார் மைய அலுவலகம் தவிர்த்து மற்ற அறைகள் அனைத்தும் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது.

    இதனால் பாம்பு உள்ளி–ட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாகவும், ஏராளமானவை அங்கு வசித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். உள்ளே செல்லவே அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் கூறும் போது, இந்த ஆதார் மையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு கேள்வி–க்குறியாக இருக்கின்றது. பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுபற்றி ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள்அளிக்க–ப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த நடவடி–க்கையும் எடுக்க–வில்லை.

    இந்த கட்டிடம் பாழடைந்து தூசு படிந்து கிடக்கிறது. ஆதார் மையத்திற்குள் முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்காரும் வகையில் இருக்கை வசதி இல்லை. கழிப்பிட வசதியும் இல்லை. அவசரத் தேவைகளுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் செல்ல வேண்டி இருக்கிறது.

    இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதியும் சீராக இல்லை. இதனால் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்து விடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. தினமும் 50-க்கும்மேற்பட்ட பொது மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

    மழை காலங்களில் உடைந்து காணப்படும் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுகிறது. ஆகவே எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தினால் திருட்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்றனர்.

    ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி கூறும்போது, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒரு அறையை ஆதார் மையத்தி–ற்கு ஒதுக்கலாம் என்றால் அதற்கான இடவசதி இல்லை. இருப்பினும் உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் பாதுகாப்பை மாநகராட்சி உறுதிப்படுத்தும் என்றார்.

    ×