என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK Member Arrest"

    • அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர் பா.ம.க. வை சேர்ந்தவர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகுதியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சேட்டு மகன் ராம்குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    ×