search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plight of women"

    • கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.
    • இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. ஆனால், இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து நாட்களிலும், இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்துக் கடைகளால், மலைவாழ் மக்கள் பலரும் பல்வேறு இன்னல்க–ளுக்கு ஆளா–கின்றனர். குறிப்பாக, பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர் செல்லும் வழியில், சந்துக்–கடைகள் செயல்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. அதனால் சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கொல்லி–மலை ஒன்றியம், தேவனூர்–நாடு பஞ்சாயத்து பகுதி மக்கள் கலெக்டர் அலுவ–லகத்தில் மனு கொடுத்தனர்.

    இது குறித்து, மலைவாழ் மக்கள் சிலர் கூறியதாவது:-

    தேவனூர்நாடு பஞ்சா–யத்து பின்னம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள வெண்டலபாடி பஸ் ஸ்டாப்பில், சந்துக்கடையில் அமோகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு, மதுபிரியர்கள் குடித்து விட்டு, அவ்வழியாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர்.

    மேலும், மது போதையில் அரை நிர்வாணத்தில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். அதனால், அவ்வழியாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்வதற்கு அச்சப்ப–டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து, பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், மாணவியர் நலனை கருத்தில் கொண்டு, சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×