என் மலர்

  நீங்கள் தேடியது "Planting native plants"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊடுருவிய மரத் தாவர மேலாண்மை குறித்து சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
  • வனத்தில் பரவும் உன்னி செடிகளால் வன உயிரினங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமில்லாமல் அது வனத்திற்கும் கேடு விளைவித்து மண் வளத்தை பாதிக்கிறது.

  மேட்டுப்பாளையம்,

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊடுருவிய மரத் தாவர மேலாண்மை குறித்து சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

  மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத்மொகபத்ரா, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், சுதா ஐ.எப்.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

  தொடர்ந்து மாநில முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத்மொகபத்ரா, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  நாட்டில் உள்ள வனப்பகுதியில் கருவேல மரங்கள், உன்னி செடிகள், பார்த்தீனியம் உள்ளிட்ட ஏராளமான அந்நிய தாவரங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.

  குறிப்பாக வனத்தில் பரவும் உன்னி செடிகளால் வன உயிரினங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமில்லாமல் அது வனத்திற்கும் கேடு விளைவித்து மண் வளத்தை பாதிக்கிறது.

  எனவே இதனை களையெடுக்க தமிழகத்தில் தற்போது மாநில திட்ட கமிஷன் நிதியுதவியுடன் புதிய திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. வனத்தில் உன்னி செடிகளை அகற்றி நாட்டு மரங்களை அதிகளவில் ஏற்படுத்துவதால் வனவிலங்குகளுக்கான உணவு சங்கிலி பாதுகாக்கப்படும்.

  எனவே அதனை விரைந்து செயல்படுத்த 5 மாநில வன அதிகாரிகள் கருத்தரங்கில் வலியுறுத்தி உள்ளோம்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  இதில் சென்னை மாநில திடட கமிஷன் உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உத்தராஞ்சல், கர்நாடகா மாநில வனபாதுகாப்பு அலுவலர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளான மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் முனைவர் சேகர் நன்றி கூறினார்.

  ×