search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plantation Scheme"

    • மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முன்னோடித் திட்டமான "பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின்" ஒரு பகுதியாக மதுரையில் "மாமதுரை போற்றுதும்" என்னும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் பல்லுயிர் வளம் பெருக்கவும் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும், மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் வேம்பு, இலுப்பை போன்ற பாரம்பரிய மரங்களும் மஞ்சநத்தி, புங்கை, பூவரசு போன்ற மருத்துவ குணங்கள் மிகுந்த மரங்களும் மா, கொய்யா, நாவல் போன்ற பழமரங்களும் நடப்படும். இந்த மாபெரும் முன்னெடுப்பில் பங்கேற்க அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பசுமை அமைப்புகள், குடியிருப்போர் நலச்ச–ங்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மாணவ-மாணவிகள் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சரி வைத்துள்ளவர்கள் தங்கள் பங்களிப்பினை மரக்கன்றுகளாகவும், பொருளாகவும் மனித உழைப்பாகவும் அளிக்கலாம்.

    மரக்கன்றுகள் தொடர்பான பதிவுகளையும், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் வருகையையும் வருகிற 10-ந் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 93630 05523 மற்றும் 94452 29295 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×