search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pirandai recipes"

    பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூலநோய் போன்றவை குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டை இலை - 100 கிராம்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 3 பல்,
    மிளகு - 5,
    காய்ந்த மிளகாய் - 3,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    கொத்தமல்லி - தேவையான அளவு
    மஞ்சள், உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை  :

    பிரண்டை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    சூப்பரான சத்தான பிரண்டை இலைத் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பிரண்டை தொக்கை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இன்று இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  
    உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,  
    புளி - நெல்லிக்காய் அளவு,  
    பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,  
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,  
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,  
    நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,  
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:     

    பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து ஓரங்களில் இருக்கும் நாரை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்).

    வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர் இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

    வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

    அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டை இளசாக - 1 கப்
    புளி - 100 கிராம்,
    சின்னவெங்காயம் - 10,
    தக்காளி - 1,
    பூண்டு - 7 பல்,
    சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
    வெல்லம் - சிறிது,
    கடுகு - 1/2 தேக்கரண்டி,
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
    உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது,
    பெருங்காயத்தூள் - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப,

    வறுத்துப்பொடி செய்ய :

    நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
    தனியா - 2 தேக்கரண்டி,
    கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது,
    வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
    கசகசா - 1/4 தேக்கரண்டி



    செய்முறை  :

    பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.

    தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்

    தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

    புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

    பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×