search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PG COURSE"

    • முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்‌.‌
    • இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வரிடம் பெற்ற படிப்பு முவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    வடவள்ளி:

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், 8 கல்வி வளாகங்களில் 32 துறையில் முதுகலைப் பட்டப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக இன்று தொடங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி இணையதளம் தொடங்கி வைத்தார்‌.‌

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய ஆன்லைன் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை https: admission satpgachool.tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இளங்கலை, முதுகலை படித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வரிடம் பெற்ற படிப்பு முவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இருப்பினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 9489056710 என்ற தொலைபேசி என்ற எண்ணிற்கும், pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி சந்தேகங்களைக் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் ஆகஸ்டு 11-ந் தேதி இறுதி விண்ணப்பதாரர்கள் பெயர் அளிக்கப்படும். 27-ந் தேதி மார்க் டெஸ்ட் நடத்தப்படும். அதை தொடர்ந்து 28-ந் தேதி நுழைவு தேர்வு நடைெபறும். அதை தொடர்ந்து செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரிகள் துவங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×