என் மலர்

  நீங்கள் தேடியது "Petai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.
  • அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  நெல்லை:

  பேட்டையை சேர்ந்தவர் சிவா. இவர் சத்யா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

  சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.

  அப்போது அவர்களை வழிமறித்து பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (வயது 26), பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்து என்ற முத்தார் (22) மற்றும் சுடலை முத்து (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புடைய 4 செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பேட்டை இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் நாகராஜ் உட்பட 3 பேரையும் ஒருமணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்

  ×